அறுபடை முருகன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
ADDED :3531 days ago
சென்னை: பெசன்ட் நகர், அறுபடை முருகன் கோவிலில், நுாதன ராஜகோபுரம் கட்டி, புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், நாளை அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பெசன்ட் நகரில், அறுபடை முருகன் கோவில் அமைந்துள்ளது. அங்கு, நுாதன கருங்கல் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகளும் முடிந்துள்ளன. கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை (மார்ச் 18) நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. நாளை காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு, திருக்கல்யாணம், இரவு, 7:30 மணிக்கு, சுவாமி வீதியுலா ஆகியவை நடக்க உள்ளன.