உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா!

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவவிழா முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக மற்றும் ரிஷபகொடி ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் 15ம் தேதி காலை விநாயகர், சுப்ரமணியர்,கயிலாசநாதர்,சுந்தாம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரவேதர் அபிஷேகம் திபாரதனைகள் நடைபெற்றது.இரவு விநாயகர் முஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வர் ரிஷப வாகனத்திலம் வீதி உலா நடைபெற்றது. பின் பஞ்சமூர்த்திகள் பாரதியார்சாலை, மாதாகோவில்வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !