அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாணம்
ADDED :3533 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி மாதம் நடக்கும் 5 நாள் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 20ல் துவங்குகிறது. தினமும் மாலையில் பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இரவு 7.30 மணிக்கு கோயிலை சென்றடைகிறார். மார்ச் 23ல் காலை 11.15 மணிக்கு ஆண்டாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் ஆகியோருக்கு மங்கள நாண் அணிவிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.