ஜபத்தை - ராம், ராம் என்று செய்ய வேண்டுமா?
ADDED :5225 days ago
ராம என்பது முழுப் பெயராகக் கொள்வோமானால், ராம் என்பது பெயருக்கு முன் நாம் உபயோகப்படுத்தும் இனிஷியல் போல. இதை ( ராம்) மந்திர சாஸ்த்திரத்தால் பீஜாக்ஷரம் எனக் கூறுவர். விதையே வளர்ந்து மரமாகிறது. அந்த மரத்திலிருந்தே பல விதைகள் தோன்றி பல மரங்களுக்குக் காரணமாகின்றன. ஆகவே, ராம் ராம் என்றும், ராம ராம என்றும் இரண்டு வகையாகவும் கூறலாம். மிகப் பெரிய பலனை அளிக்கவல்லது. ராம் என்பதையும் ராம என்பதையும் பிரணவத்தை முதலாகவும், வணக்கத்தைக் குறிக்கக்கூடிய சொல்லைப் பிற்பகுதியிலும் வைத்து சிறந்த உயர்ந்த மந்திரத்தை ராம பக்தர்கள் இன்றளவும் ஜபித்து உன்னத நிலையை அடைந்து வருகின்றனர்.