உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா!

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணிதிருவிழாவில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அறுபடை வீடுகளில் முக்கியமான 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகருக்கு சண்முக விலாசத்தில் வைத்து தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் மண்டகப்படிதாரர்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலையில் சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரினம் செய்தனர். பின்னர் இரவு சண்முகர் வெள்ளை சாத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். விழாவில் இன்று அதிகலை 5.30 மணிக்கு வெள்ளிசப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். இன்று பச்சை சாத்தி நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். விழாவில் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் 27ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தினசரி காலை மாலை சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !