கோணவாய்க்கால் சித்தி விநாயகர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3534 days ago
ஈரோடு: கோணவாய்க்கால் சித்தி விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மார்ச்18, நடந்தது. ஈரோடு கோணவாய்க்கால் பகுதியில் சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில்
கும்பாபிஷேக விழா, கடந்த, 15ம் தேதி, தொடங்கியது. இதையடுத்து, 16ம் தேதி, முதற்கால யாக
பூஜை நடந்தது. சித்தி விநாயகர், மஹாலட்சுமி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கு
அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி, 17ம் தேதி நடந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகம்,
மார்ச்18, காலை வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.