பழநி பங்குனி உத்திரத்திற்கு 300 சிறப்பு பஸ்கள்
ADDED :3534 days ago
திண்டுக்கல்: பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக
மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் வின்சென்ட் தெரிவித்துள்ளார்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 23 நடக்கிறது. இதற்காக அரசு போக்குவரத்துக்கழக
திண்டுக்கல் கோட்டம் சார்பில், 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோவை, பொள்ளாச்சி,
திருப்பூர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில்
இருந்து பழநிக்கும், பின் பழநியிலிருந்து அந்த பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.