உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின், எட்டாம் நாளான, இன்று அறுபத்து மூவர் விழா நடக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, சுவாமி தேருக்கு எழுந்தருளினார். காலை, 7:15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர், விநாயகர், சண்டேசர் ஆகியோரின் தேர்கள் வரிசையாக, நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து, காலை, ௧௧:௧௫ மணிக்கு நிலையை அடைந்தன.தேரோட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பல இடங்களில் அன்னதானம் நடந்தது. மோர், குளிர் பானங்கள், தண்ணீர் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.திருவிழாவின் எட்டாம் நாளான இன்று, காலை, ௧௧:௦௦ மணிக்கு, திருஞானசம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்கும் அற்புதம், மேற்கு குளக்கரை மண்டபத்தில் நடக்கும். தொடர்ந்து, பிற்பகல், 3:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி, ௬௩ நாயன்மார்களுடன் வீதியுலா வரும் முக்கிய நிகழ்வு நடக்கும். இரவு, ௧௦:௦௦ மணிக்கு சந்திரசேகரர், பார்வேட்டைக்கு எழுந்தருளல், அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா ஆகியவை நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !