செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :3494 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டுவிழா நடந்தது. நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. சங்குகளில் இருந்த புனிதநீரால் விநாயகருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந் தது. ஆலை துணைத் தலைவர் பாலாஜி, பொது மேலாளர் ரகுராம், விழா குழுவினர் குமரப்பன், இளங்கோவன், வைரக்கண்ணு, ரகுபதி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.