உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 23ல் கோலாகலம்

ஹெத்தையம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 23ல் கோலாகலம்

ஊட்டி: பேரட்டி அருகேயுள்ள, மல்லிக்கொரை விநாயகர் மற்றும் ஹெத்தையம்மன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா வரும், 23ம் தேதி நடக்கிறது. இன்று இரவு, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. வரும், 23ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நாளன்று, காலை, 10:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, அர்ச்சனை ஆராதனைகள் நடக்கின்றன. மதியம்,1:00 மணிக்கு கோவிலில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டு, மல்லிக்கொரை முருகன் கோவிலை வந்தடைகிறது. அங்கு சிறப்பு பூஜை, ஆராதனை, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இரவு, 8:00 மணிக்கு துவங்கும் ஊர்வலம், ஆறு வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைகிறது. வரும், 24ல் மஞ்சள் நீராடல், மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பங்குனி உத்திர விழா நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !