ஜெய காளியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :3492 days ago
திருமங்கலம்: திருமங்கலம் ஜெய காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, அபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. இரவு கரகம் சுமந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பெண்கள் பொங்கல் வைத்தனர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக குழுத் தலைவர் வீரபத்திரன், செயலாளர் செல்வம், பொருளாளர் ராஜேந்திரன் விழா ஏற்பாடுகளை செய்தனர்.