உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் காவடி புறப்பாடு!

காரைக்கால் தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் காவடி புறப்பாடு!

காரைக்கால்: காரைக்கால் வலத்தெரு தெட்சணமுத்து மாரியம்மன் கோவிலில் முளைப்பாலிகை திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவர் காவடி புறப்பாடு நடைபெற்றது. காரைக்கால் வலத்தெரு தெட்சணமுத்து மாரியம்மன், நடனகாளியம்மன்,பத்திரகாளியம்மன், படைபத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி முளைபாலிகை திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கியது. கடந்த 18ம் தேதி திருவிளக்கு பூஜைகள் நடந்தது.நேற்று அரசலாற்றங்கரையிலிருந்து சிறுவர்காவடி,ஊர்க்காவடிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று தெட்ணமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வரும் 22ம் தேதி நான்கு அம்பாள்களும் முளைப்பாலிகையுடன் வீதியுலா நடைபெறுகிறது.இவ்விழாக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !