உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பொற்சோதிநாதர் கோயிலில் திருமுறை இசைப்பயிற்சி!

செம்பொற்சோதிநாதர் கோயிலில் திருமுறை இசைப்பயிற்சி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோயிலில் குழந்தைகளுக்கான திருமுறை இசைப்பயிற்சி வகுப்பு நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் பிரதி ஞாயிறு தோறும் 7 முதல் 15 வயதிலான குழந்தைகளுக்கு திருமுறை இசைப்பயிற்சி வகுப்பு, பெரிய புராண சொற்பொழிவு. மூன்றாம் ஞாயிறு அன்று சைவப்பாட வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் பிரதி செவ்வாய் தோறும் குழந்தைகளுக்கு பரத நாட்டிய வகுப்பு,  பிரதி சதயம் தோறும் திருநாவுக்கரசு குருபூஜை, அன்னதானம். திருவாசக முற்றோதல், ஆங்கில கடை ஞாயிறுதோறும் உழவாரத்திருப்பணி நடைபெறுகிறது.

கோவிலில் மூன்றாம் ஞாயிறான நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் பிரகாரத்தில் கோவை மணிவாசகர் மன்ற சிவனடியார் திருநாவுக்கரசு சைவப்பாட வகுப்பினையும், பகல் 1:00 மணிக்கு சிவனடியார் கோகுல் திருமுறை பாடல் பயிற்சி வகுப்பினையும், திருநாவுக்கரசர் திருமடத்தில் பவானி சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த பிரகாஷ் பெரிய புராண சொற்பொழிவும் நடத்தினர். தொடர்ந்து பங்குனி மாத முதலாம் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று மாலை 6:00 மணிக்கு நடத்தப்பட்டது. இசைப்பயிற்சி மாணவர்கள் சாமிக்கு பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்தனர். வண்ண மலர்களால் அலங்கரித்து, அலங்கார தீபங்களுடன், திரிசங்கு, கயிலை வாத்தியம், பிரம்மதாளம் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !