உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம்

சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம்

புதுச்சேரி: சஞ்சய்காந்தி நகர் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள சஞ்சய் காந்தி நகர் வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி கோவிலில், 13ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா 15ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன்  துவங்கியது. தினந்தோறும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. நேற்று  பால்குடம், காவடி புறப்பாடு நடந்தது. ஏராளமான பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இன்று  (22ம் தேதி) தேர் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !