உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை

திருப்பூர் :கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் லட்சுமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முதன்முறையாக, இந்தாண்டு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இன்று காலை, 6:00க்கு லட்சார்ச்சனை துவங்கும். பூஜையில், மகாலட்சுமிக்கு பங்குனி உத்தர அபிஷேக வழிபாடு நடத்தப்படும்.நாளை காலை, 6:00க்கு, 108 தாமரை மலர்களால் மகா லட்சுமி ஹோமம், 1,008 விஷ்ணு சகஸ்ரநாம சுதர்சன ஹோமம், மாலை, 4:00க்கு, ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கும், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !