உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குயவன்குடியில் இன்று பங்குனி உத்திர விழா

குயவன்குடியில் இன்று பங்குனி உத்திர விழா

ராமநாதபுரம்: குயவன்குடி சாது சுப்பையா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று(மார்ச் 22) நடக்கிறது. மார்ச் 14ல் காப்புகட்டு, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பாராயணம், திருப்புகழ் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் பூ வளர்க்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. மார்ச் 23(புதன்) அதிகாலை 3 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !