சுப்ரீஸ்வரர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா
ADDED :3484 days ago
மூங்கில்துறைப்பட்டு: வடபொன்பரப்பி சுப்ரீஸ்வரர் சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. வடபொன்பரப்பி முஸ்குந்தா நதிக்கரையில் உள்ள சுப்ரீஸ்வரர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 10ம் தேதி காலை இரண்டாம் காலயாக பூஜைகள், நாடி சந்தானம், கலாகர்ஷனம், யாத்திரா தானம், வேதபாராயணம், இரண்டாம் கால மஹா தீபாரதனை நடந்தது.