உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கோவில்களில் திருக்கல்யாணம்

விழுப்புரம் கோவில்களில் திருக்கல்யாணம்

விழுப்புரம்: விழுப்புரம் பகுதி கோவில்களில், பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி குபேரன்  கோவிலில் இன்று மாலை  ஸ்ரீ மகாலட்சுமி, சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அதே போல், நாளை காலை 9:00 மணிக்கு இந்திரா நகர்  பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பக்தர்கள் காவடி உற்சவம் நடக்கிறது.   பிள்ளையார்குப்பம் வள்ளி தெய்வானை சமேத  முருகபெருமான் கோவிலில், இன்று மாலை 6:00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை திருமணம், நாளை காலை 7:00 மணிக்கு காவடி  ஊர்வலம், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !