நம்பிய பேருக்கு ஏது பயம்!
ADDED :3885 days ago
இலங்கையில் ராவணனுடன் நடந்த போரில் ராமர் வெற்றி பெற்றார். இந்த வெற்றிச் செய்தியை சீதைக்குத் தெரிவிக்க விரும்பிய ஆஞ்சநேயர் அசோக வனத்திற்கு ஓடி வந்தார். வந்த வேகத்தில் மூச்சிறைத்ததால் ஆஞ்சநேயருக்கு பேச முடியவில்லை. இருந்தாலும், சீதைக்கு வெற்றிச் செய்தியை உடனே தெரிவிக்க விரும்பி தரையில் ஸ்ரீராம ஜெயம் என்று எழுதிக் காண்பித்தார். அது முதல் இதையே மந்திரமாக எழுதும் வழக்கம் உண்டானது. இதை லிகித நாம ஜெபம் (எழுதும் மந்திரம்) என்று சொல்வர். மனதில் எண்ணிய விருப்பம் விரைவில் நிறைவேற ராமநாமம் எழுதும் வழக்கம் காலம் காலமாக நடைமுறையில் இருக்கிறது. ராமஜெயம் மந்திரத்தை நம்பிக்கையுடன் சொல்பவர்களுக்கு பயம் என்பதே இருக்காது.