உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பக்தர் கட்டிய ராமர் கோவில்!

சென்னை பக்தர் கட்டிய ராமர் கோவில்!

வடமாநில கோவில்களில் பளிங்குச்சிலைகள் இருப்பது மரபு. ஆனால் அயோத்தியில் உள்ள அம்மாஜி மந்திர் கோவிலில் தமிழகத்தைப் போல கல் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையைச் சேர்ந்த ராமபக்தரால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், சீதாராமர், லட்சுமணர், பரதன், சத்ருக்கனன், அனுமன், விபீஷணன் உள்ளனர். உற்சவர் சிலைகளும் உள்ளன. மாவடு சுவாமி அயோத்தியில் ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது இலங்கை யுத்தத்தில் உதவி செய்த அனைவருக்கும் அவர் பரிசு வழங்கினார். அனுமனுக்கு பரிசளிக்க விரும்பிய ராமர் முத்துமாலை ஒன்றை எடுத்து சீதையிடம் கொடுத்து, மாவடுக்கு கொடு என்று கூறினார். இதற்கான விளக்கத்தை ஆன்மிகச் சொற்பொழிவாளர் கீரன் குறிப்பிடும் போது, வடு என்பது பிரம்மச்சாரியைக் குறிக்கும். மாவடு என்பதற்கு பெரிய பிரம்மச்சாரி என்று பொருள். அதாவது பெரிய பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரைக் குறிக்கும். சீதையும் அந்த முத்துமாலையை ஆஞ்சநேயருக்கு மகிழ்ச்சியுடன் அளித்தாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !