ஆறுமுகநேரியில் இந்து எழுச்சி திருவிழாவரும் 28ம் தேதி துவக்கம்
ஆறுமுகநேரி:ஆறுமுகநேரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து எழுச்சி திருவிழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. வரும் 3ம் தேதி 108 விநாயகர் சிலைகளுடன் திருச்செந்தூரில் விஜர்சனம் நடக்கிறது.ஆறுமுகநேரியில் நகர இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை இந்து எழுச்சி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 20வது விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழா வரும் 28ம் தேதி முதல் துவங்குகிறது. இதை முன்னிட்டு 28ம் தேதி சோமநாத சுவாமி கோயிலில் 11 அடி உயர வீரவிநாயகர் பிரதிஷ்டை நடக்கிறது. மாலை சிவன்கோயிலில் இருந்து புறப்பட்டு மெயின்பஜாரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு மெயின் பஜாரில் உள்ள செந்தில் விநாயகர் கோயிலில் வீரவிநாயகர் கொலு அமர்த்தல் நடக்கிறது. வரும் 31ம் தேதி விநாயகர் சிலை நகரின் பல்வேறு இடங்களில் கொலு அமர்த்துகின்றனர். வரும் 2ம் தே தி வீரவிநாயகர் அலங்காரத்தில் நகரில் உள் ள 25 முக்கிய அம்மன் கோயிலுக்கு புறப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி மதியம் 108 விநாயகர் சிலைகளுடன் இந்து எழுச்சி பேரணி நடக்கிறது. விநாயகர் ஊர்வலம் திருச்செந்தூர் கடலுக்கு சென்று விஜர்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆறுமுகநேரி இந்து முன்னணி நகர தலைவர் ராமசுவாமி, பொதுச் செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சக்திதாசன், செயலாளர்கள் கசமுத்து, முத்துகுமார், பாஸ்கர், ஞானபழம், பொன்மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன், முத்துராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.