போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணி
ADDED :5161 days ago
போடி : போடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி திருப்பணிகள் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. கோயில் நிர்வாக அலுவலர் சுதா கூறியதாவது: சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரியில் நடக்க உள்ளது. கோயில் மேற்கு பிரகார கோபுர மண்டபப்பணிகள் இந்து அறநிலையத்துறை பொது நிதி 11.50 லட்சம் மதிப்பிலும், நன்கொடையாளர்கள் உதவியுடன் தெற்கு பிரகார மண்டபம் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. மண்டபம், அலுவலக மராமத்துப்பணிகள் மேற்கொள்ள சுமார் 40 லட்சம் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. கோயில் திருப்பணிகள், சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், கொடிமரம் அமைப்பதற்கான பணிகள், சிலைகள் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.