காத்திருக்கும் தண்டனை!
நமக்காக பாவங்களை இயேசுகிறிஸ்து ஏற்றார். ஆனால் அவரை பலரும் மறந்து போய் பாவங்களை தொடர்ந்து செய்கிறார்கள். கடவுளையே நிந்திக்கும் அளவு துணிந்து விட்டார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும். இதோ! பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.
*மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக்கொண்டேயிருந்து பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன். (அதாவது பாவம் அதிகமாகும் நாட்டில் பட்டினி சாவு அதிகரிக்கும்) *சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்
*நீ என்னை (கடவுளை) விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன்.
*மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன். (மனிதரை நம்பி பயனில்லை. ஆண்டவரையே நம்பு என்பது இதன் பொருள்) இந்த வசனங்களை புனிதவெள்ளி நாளில் திரும்பத் திரும்பப் படியுங்கள். இவற்றை மனதில் கொண்டு பாவச் செயல்களை விடுங்கள். நன்மை தருபவற்றையே உங்களுக்கும் பிறக்கும் செய்யுங்கள்.