கோ.பவழங்குடியில் அங்காளம்மன் கோவிலில் தேர்த் திருவிழா
ADDED :3485 days ago
மங்கலம்பேட்டை: கோ.பவழங்குடி அங்காளம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடி அங்காளம்மன் கோவி லில், பங்குனி உத்திர பெருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (22ம் தேதி) தேர் திருவிழாவையொட்டி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (23ம் தேதி) பங்குனி உத்திர பெருவிழாவை யொட்டி, தீர்த்தவாரி நடக்கிறது.