உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரி தாயார் திருக்கல்யாணம்: பக்தர் மொய்ப்பணம் வழங்கினர்

நாமகிரி தாயார் திருக்கல்யாணம்: பக்தர் மொய்ப்பணம் வழங்கினர்

நாமக்கல்: பங்குனி தேர்திருவிழாவை முன்னிட்டு, குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடந்த, திருக்கல்யாண நிகழ்ச்சியில், பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் வழங்கினர். நாமக்கல் நகரின் மையத்தில் உள்ள, நரசிம்ம சுவாமி கோவிலில், பங்குனி தேர்திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை, நாள்தோறும் காலை, நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் சுவாமி திருவீதி உலாவும், கமலாலயக் குளக்கரை கோவில் மண்டபத்தில் ஸ்நபனத் திருமஞ்சனம், இரவு, மீண்டும் திருவீதி உலா நடந்தது. நேற்று, காலை, 8 மணிக்கு, திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, மாலை, 6 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் இறைவனுக்கு மொய் வழங்குவது சிறப்பு என்பதால், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு மொய்ப்பணம் வழங்கினர். அதில், நரசிம்மர், ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !