சுந்தரத்தில் சாய் கானா யக்ஞம்
ADDED :3515 days ago
ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், சுந்தரத்தில், 91 பஜன்கள் அடங்கிய, சாய் கானா யக்ஞம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில், ஆர்.ஏ.புரம் சுந்தரத்தில், சாய் கானா யக்ஞம் என்ற பெயரில், நேற்று காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை பஜனை நடைபெற்றது.சத்யசாய் பாபாவின், 91 பஜன்களை, சாமியின் சீடரான டி.வி., ஹரிஹரன் பாடினார். விழாவில், சிந்தர முககா, தேயா சுதா, சங்கட ஹரனா, ஜெய ஜெய கோவிந்தா, கங்காதர ஹரே, மாதவா கேசவா, ஸ்ரீ ராமா ரகுநந்தனா உள்ளிட்ட பஜன்கள் பாடப்பட்டன. பக்தர்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்.