திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பச்சை குதிரை வாகனம் உபயம்!
ADDED :3518 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அப்பகுதி கள்ளத் தேவர் வகையறாவினர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பச்சைக் குதிகை வானத்தை உபயமாக கொடுத்தனர். பங்குனித் 11ம் நாள் திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கிரிவலப்பாதையில் பச்சைக் குதிரை ஓட்டம் நடக்கும். அதன்பின்பு பச்சைக்குதிரைக்கு கவாட களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து, சுவாமிக்கு பட்டாபிஷகம் நடக்கும். ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்ததால் புதிய வானம் வழங்கப்பட்டது.