உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி விழா துவங்கியது

எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி விழா துவங்கியது

சேத்தூர்: சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி விழா நேற்றுகாலை டியேற்றத்துடன் துவங்கியது.இதையொட்டி காலையில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேம் ,சிறப்பு தீபாராதனை ,தொடர்ந்த அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.4ம் நாளன்று அம்மன் ரிஷப வாகனம்,7 ம் நாளில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.7ம் நாளன்று விரதமிருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1 மாலையில் காப்பு கட்டிய பக்தர்கள் பூ க்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடை விழா கமிட்டி தலைவர் சுப்பிரமணியன்,செயலாளர் சண்முகநாதன்,பொருளாளர் பொன்னுச்சாமி, அறங்காவலர் குருசாமி மற்றும் நிர்வாக குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !