முத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :3527 days ago
ஈரோடு: ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில், பங்குனித் திருவிழாவை ஒட்டி, திரருவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. நாளை (26ம்தேதி) இரவு, 8 மணிக்கு, முத்துமாரியம்மனுக்கு தாலாட்டுப் பாடல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. காரைவாய்க்கால் சென்று, பம்பை, கொட்டு வாத்தியத்துடன், தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி, 27ம் தேதி, காலை, 5 மணிக்கு நடக்கிறது. மறுபூஜையுடன், 28ல் நிறைவு பெறுகிறது.