உடுக்கம்பாளையம் காமாட்சியம்மனுக்கு கும்பாபிேஷகம்
உடுமலை : உடுக்கம்பாளையம் காமாட்சி அம்மன் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். உடுமலை, உடுக்கம்பாளையத்தில் அமைந்துள்ளது, காமாட்சி அம்மன் ஏகாம்பரஈஸ்வரர் கோவில். கோவில் புனரமைப்பு பணி கடந்த மாதம் நிறைவடைந்ததையடுத்து, மார்ச் 21ல் கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. இரவு, கும்பாலங்காரமும், முதல் கால யாக பூஜையும் நடந்தன.மார்ச் 22ம் தேதி காலை, மண்டபார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜை, ேஹாமமும் நடந்தது.நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால பூஜை நடந்தது. காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், விமானத்துக்கு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது; தொடர்ந்து, பரிவார சகித காமாட்சி அம்மனுக்கு மகா கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, காமாட்சி அம்மனுக்கும் ஏகாம்பர ஈஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.