உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைவன நாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பு ஹோமங்கள்

புன்னைவன நாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பு ஹோமங்கள்

க.பரமத்தி: க.பரமத்தி யூனியன், புன்னத்தில் புன்னை வனநாயகி உடனுறை புன்னைவன நாதர் கோவிலில் உள்ள சண்முகநாதர் சுவாமிக்கு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் முரளி சிவாச்சாரியார் தலைமையில், அர்ச்சகர் தங்கமணி மற்றும் குழுவினர் ஹோமங்கள் நடத்தினர். இதேபோல் பவித்திரம் பஞ்சாயத்தில், பாலமலை பாலசுப்பிரமணி கோவில், முன்னூர் சாலையில் உள்ள காவடி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை வழங்கப்பட்டது. காருடையாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள கருங்கரடு பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !