அரியாங்குப்பத்தில் பங்குனி உத்திர விழா
ADDED :3527 days ago
புதுச்சேரி:அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. காலை 9.00 மணிக்கு பால் அபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து 10.00 மணிக்கு ஊர் மக்கள் எடுத்து வந்த பாலை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு ௭.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.