பங்குனி உற்சவ விழா 308 திருவிளக்கு பூஜை
ADDED :3527 days ago
மதுரை: மதுரை கான்பாளையம் குறுக்குத்தெருவில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் பங்குனி உற்சவ 308 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு முத்துக்குமார் குழுவின் நாதஸ்வர இசையுடன் காலை 7 மணிக்கு கணபதி பூஜை துவங்கியது. பின் 108 கலச பூஜை, காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், 108 கலச தீர்த்த அபிஷேகம், மதியம் 12.00 மணிக்கு பிரதான கலச தீர்த்தாபிஷேகம் நடந்தது. விழாவிற்கு பக்தசபை கமிட்டி தலைவர் பெரிசேகரன் தலைமை வகித்தார்.அமைச்சர் செல்லுார் ராஜூ, போலீஸ் உதவி கமிஷனர் முத்துக்குமார் கலந்து கொண்டனர். ஸ்ரீநவநீத கண்ணன் மாதர் பஜனை குழுவினர் திருவிளக்கு பூஜையை நடத்தினர். இரவு 8 மணிக்கு ஜோதிடர் சுப்பிரமணி பஞ்சாங்கம் வாசித்தார். நிர்வாகிகள் பொன்சேது, சிவகுமார், முன்னாள் கவுன்சிலர் பாலயோகி உட்பட பலர் கலந்து கொண்டனர். உதயகுமார் நன்றி கூறினார்.