உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர் அலங்கரிப்பு பணி துவங்கியது

தேர் அலங்கரிப்பு பணி துவங்கியது

அவிநாசி: அடுத்த மாதம் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு, அவிநாசி கோவில் தேர் அலங்கரிப்பு பணி நேற்று துவங்கியது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 12ல் துவங்கி, 23 வரை நடக்கிறது. 19ல் அவிநாசியப்பர் தேர், 20ல் கருணாம்பிகை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் தேர்கள், நான்கு ரத வீதிகளில் வலம் வரும். இதையொட்டி, தேர் நிலை பிரிக்கப்பட்டது.அலங்கரிப்பு பணிகளுக்கான சிறப்பு பூஜை, நேற்று நடைபெற்றது. பெரிய தேரில் உள்ள பூமா தேவிக்கு எண்ணெய் காப்பிட்டு, தேர் மேல்பகுதியில், மஞ்சள் துணியில் காப்பு கட்டப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், அம்மன் தேர் அலங்கரிப்பு பணிக்கான பூஜையும் நேற்று நடந்தது. செயல் அலுவலர் அழகேசன், சிவாச்சார்யார்கள் மற்றும் பக்தர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !