சைவ சித்தாந்த சபை ஆண்டு விழா
ADDED :3527 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு ஆடி வீதியில் உள்ள சைவ சித்தாந்த சபையின் 60வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. ரத்தினசபாபதி ஓதுவார் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களின் திருமுறை பாராயணம் நடந்தது.சபை தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். நெறிமுறை தலைவர் கோவிந்தசுவாமி, பேராசிரியை யாழ்.சு.சந்திரா பேசினர். ’பட்டோலை எழுதும் பரமன்’ எனும் தலைப்பில் சிவ.காந்தி பேசினார். சபை செயலாளர் முரளிதரன் நன்றி கூறினார். விழா நாளை நிறைவடைகிறது.