உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டாம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா

கொட்டாம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா

மேலுார்: கொட்டாம்பட்டி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், தீ சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பூத்தட்டு திருவிழா நடந்தது. இன்று கிடா வெட்டி பொங்கல் வழிபாடு நடக்கிறது. நாளை முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !