ராமேஸ்வரம் கோயில் கோபுரம் சுவருடன் இணைப்பு பணி தீவிரம்
ADDED :3508 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய கோபுரத்தை மதில் சுவருடன் இணைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் முழுமை பெறாமல் மொட்டை கோபுரமாக இருந்தது. இந்நிலையில் ஜன.,20ல் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி நன்கொடையாளர் உதவியுடன் கோபுர பணிகள் முடிக்கப்பட்டு கோயில் வரலாற்றில் முதன்முதலாக 4 கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் புதிய இரு கோபுரங்களை கோயிலின் வெளிபுற மதில் சுவருடன் இணைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. பணி முடிந்ததும் வடக்கு, தெற்கு ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.