உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்!

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்!

ஒரே வீட்டிலுள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று நன்றாகப் படிக்கலாம். மற்றவர் படிப்பதற்கு சிரமப்படலாம். உடனே படிப்பவனை உயர்த்தும் விதத்தில், பரிசு, உயர்ந்த ஆடை வகையை எடுத்துக் கொடுத்து,"" இதோ பார், அவன் நன்றாகப் படித்ததால் இதை வாங்கிக் கொடுத்தேன். நீ வீட்டை விட்டு வெளியே போ, மாடு மேய்க்கப் போ, ஓட்டலில் போய் கிளாஸ் கழுவு என்றெல்லாம் திட்டக்கூடாது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. பெற்றவர்களிடம் கூட சில குறைகள் இருக்கலாம். குழந்தை இருக்கிறானே, அவன் முன்னால் புகை பிடிப்பது தவறல்லவா என்று உணராத தந்தைமார் எத்தனையோ பேர் உள்ளனர். "பலவீனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வளர்ந்த பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில், ஒருவன் தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் பெற்றவர்களிடம் கொடுத்துவிடலாம். இன்னொருவன், அதை செலவழித்துவிட்டு,

கடமைக்கு ஏதோ தொகையைக் கொடுப்பவனாக இருப்பான். இவர்களை அன்பால் தான் திருத்த வேண்டுமே ஒழிய, "" எனக்கு கொடுத்தவனுக்கு என் சொத்தில் முக்கால் பங்கு, உனக்கு வெறும் கால் பங்கு, என ஆரம்பித்துவிடக்கூடாது. குழந்தைகளின் குணம் மாறுபட்டிருக்கலாம். ஆனால், பெற்றவர்களும் அவர்களைப் போலவே இருக்கக்கூடாது. அவர்களை சமமாக நடத்தினால், அவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள். இந்தக் கருத்தில் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ""அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் குழந்தைகளிடையே சமத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், என்கிறார்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !