வேளாங்கண்ணி கோவில் திருவிழா துவக்கம்!
ADDED :5184 days ago
வேதாரண்யம் : வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. திருவிழா, செப்., 8 வரை நடக்கிறது. மொத்தம் 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் பகல் 12 மணியளவில் பக்தர்களால் வழங்கப்படும் மாதா திருக்கொடி ஏற்றப்படும். இன்று மாலை, தஞ்சை ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ், திருக்கொடியை புனிதம் செய்து ஏற்றுகிறார். விழா நாட்களில், தினமும் இரவு, கோவில் முகப்பிலிருந்து மாதா திருத்தேர் பவனியும், விழா நிறைவாக செப்.,7 இரவு, மாதா பெரிய திருத்தேர் பவனியும் நடக்கிறது.