ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் விழா!
ADDED :3576 days ago
ஈரோடு: ஈரோட்டில் பெரியமாரியம்மன் வகையறா கோவில் குண்டம் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.