ஊட்டி மாரியம்மன் கோவில் விழாவில் பூஜா குனிதா நடனம்!
ADDED :3511 days ago
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று நடந்த உபயத்தில், கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய கலையான, பூஜாகுனிதா நடனம் இடம்பெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன், சிக்கம்மன் அலங்காரத்தில் கேடய வாகனத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.