உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் ஸ்ரீவாசவி சிலை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காரைக்காலில் ஸ்ரீவாசவி சிலை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: ஆந்திரா மாநிலத்தில் புதிதாக கட்டப்படும் தங்க கோவிலில் நிறுவப்பட உள்ள ஸ்ரீவாசவி சிலையை, காரைக்காலில் ஏராளமான   பக்கதர்கள் தரிசனம் செய்தனர். ஆந்திர மாநிலத்தில், அகில பாரத ஸ்ரீவாசலி பெனுகொண்டா அறக்கட்டளை சார்பில், ரூ.130 கோடி மதிப்பில், த  ங்கக் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில், 90 அடி உயரத்தில் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீவாசவி சிலை பிரதிஷ்டை செய்ய  ப்பட உள்ளது. இச் சிலை பக்தர்கள் தரிசனத்திற்காக, ஒரு மாதத்திற்கு முன் ஆந்திராவிலிருந்து வாகனம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்   செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் காரைக்கால் மார்க்கெட் வீதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீவாசவி சிலை வந்தடைந்தது.   அங்கு, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !