உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் பாதங்கள் கரவொலி

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் பாதங்கள் கரவொலி

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் கோடை காலத்தில், பக்தர்களின் நலன் கருதி, ராஜகோபுரம் முதல் சங்கமேஸ்வரர் ஆலயம் வரை, தேங்காய் நாரிலான கால் விரிப்பு போடப்படுவது வழக்கம். இந்தாண்டு கோடை வெயில் துவங்கி பல நாட்களாகியும், விரிப்பு போடாமல் இருந்தது. இதனால் பக்தர்கள், பாதங்களை பாதுகாத்துக் கொள்ள, கொதிக்கும் வெயிலில் கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஓட வேண்டியது இருந்தது. இதுகுறித்த செய்தி, தினமலரில் வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் கோவிலில், ராஜகோபுரம் முதல் சங்கமேஸ்வரர் சன்னதி வரை, புது கால் விரிப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !