பங்குனி உத்திர பக்தர்களால் பழநி வீதியில் குவிந்த குப்பை
ADDED :3513 days ago
பழநி: பழநியில் பங்குனி உத்திரத்திருவிழா குப்பை நகரில் ஏராளான இடங்களில் அள்ளப்படாமல் குவிந்துள்ளது. பழநி கோயிலுக்கு செல்லும் முக்கிய வீதிகளான அடிவாரம் அருள்ஜோதிவீதி, அய்யம்புள்ளிரோடு, இடும்பன் கோயில்ரோடு மற்றும் கோயில் சுற்றுலா வாகனநிலையம் போன்ற பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெளியூர் பக்தர்கள் உணவு பண்டங்களை நிழற்பந்தல்கள், மரநிழலில் அமர்ந்து உண்டனர். சாப்பிட்ட இலைகள், பாலிதீன் பொட்டலங்கள், பிளாஸ்டிக் கப்களை அப்படி அப்படியே போட்டுவிட்டுச் சென்றனர். இதனால் ஏராளமான குப்பை சேர்ந்து, அள்ளப்படாமல் உள்ளதால் மேற்கண்ட வீதிகள், சாக்கடை கால்வாய்களில் குவிந்து உள்ளது. இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.