உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடையன்சாவடியில் 108 பால்குட ஊர்வலம்

இடையன்சாவடியில் 108 பால்குட ஊர்வலம்

வானுார்: ஆரோவில் அடுத்த வெங்கிடேச பெருமாள் கோவிலில்  108  பால்குட அபிஷேகம் நடந்தது. ஆரோவில் அடுத்த இடையன்சாவடி   கிராமத்தில்  உள்ள வெங்கிடேச பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.  கோவிலில் இருந்து புறப்பட்ட   ஊர்வலம், கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. முன்னதாக வெங்கிடேச பெருமாள் சாமிக்கும் சிறப்பு பூஜை,   தீபாராதனை நடந்தது.  கோவில் தர்ம கர்த்தா சுப்ரமணி, ஊர் நாட்டாண்மைகள் கலியமூர்த்தி, சிவப்பிரகாசம், வக்கீல் முத்து, பொதுமக்கள் உள்பட   பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !