உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவிலில் தரிசன கட்டணம் ரூ.100?

திருப்போரூர் கோவிலில் தரிசன கட்டணம் ரூ.100?

திருப்போரூர் : காஞ்சிபுரம் மாவட் டம், திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

இங்கு, நீண்டகாலமாக, 10 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணத்தில், பக்தர்கள், கருவறைக்கு அருகில் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக, பக்தர்களை கருவறைக்கு சற்று தொலைவாகவே நிறுத்தி தரிசனம் செய்ய சொல்கின்றனர்; சாதாரண நாட்களில் கூட கருவறைக்கு அருகில் செல்ல அனுமதிப்பதில்லை.விசேஷ நாட்களில், பக்தர்களிடம், விரைவாக தரிசனம் செய்யலாம் என கூறி, கோவில் நிர்வாகத்தினர், 100 ரூபாய் தரிசன கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 10 ரூபாய் டிக்கெட்டுகளை, பத்து நபருக்கு வழங்குவது போல், டிக்கெட் இயந்திரத்தில் டைப் செய்து, 100 ரூபாய் டிக்கெட்டாக ஒரே நபருக்கு வழங்குகின்றனர் என, பக்தர்கள் கூறுகின்றனர்.நுாறு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்த பிறகும், கருவறைக்கு அருகில் செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர்; பத்து ரூபாய் தரிசன டிக்கெட் பக்தர்களுடன் இணைத்து விடுகின்றனர் என, பக்தர்கள் குமுறுகின்றனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலரை கேட்ட போது, கந்தசுவாமி கோவிலில், பத்து ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படுகிறது; நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தருவதில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !