உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.11ல் துவங்குகிறது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா ஏப்.11ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.20, தீர்த்தவாரி 21ல் நடக்கிறது. விழா நாட்களில் பாகம்பிரியாள் தாயார் அன்னவாகனம், பூதம், சிம்மம், வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் கிராமத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !