உடுமலை தலைகொண்டம்மன் கோவில் திருவிழா
உடுமலை: உடுமலை தலைகொண்டம்மன் கோவில் திருவிழாவில், நேற்று அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை, சதாசிவம் வீதியில் அமைந்துள்ளது, சொர்ணகாமாட்சியம்மன் என்கிற தலைகொண்டம்மன் கோவில். உடுமலை பகுதியில் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றான இக்கோவில் திருவிழா, மார்ச் 15ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது; ஏப்., 2ல் நிறைவடைகிறது. தி ருவிழா கொடியேற்றம் மார்ச் 25ம் தேதி நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மார்ச் 27ல், பரதநாட்டிய நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 28 ம் தேதி கொடுமுடியில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், டி.வி.பட்டணம் விநாயகர் ÷ காவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து தலைகொண்டம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 29ம் தேதி இரவு, சக்தி அழைத்தலும், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை, பூவோடு, மாவிளக்கு எடுக்கப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இன்றிரவு, இன்னிசை நிகழ்ச்சியும், நாளை இரவு, 7:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு, குட்டைத் திடலில், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்., 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு, திருவிழா கொடிஇறக்குதல், மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.