அக்னிமாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா கோலாகலம்
ADDED :3518 days ago
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், அக்னிமாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஏரளமான பக்தர்கள் தீ மிதித்தனர். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அக்னிமாரியம்மன் கோவிலில், பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நேற்று அதிகாலை துவங்கியது. இதில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்.