உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு: ஈரோட்டில் பிரசித்திபெற்ற, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா, வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் சின்ன மாரியம்மன் கோவிலில், தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே, ஆயிரக்கணக்காணக்கான பக்தர்கள், கோவிலில் குவிய தொடங்கினர். காலை, 9.30 மணிக்கு, தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டது. எம்.பி., செல்வகுமார சின்னையன், ஆர்.டி.ஓ, நர்மதா தேவி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா உட்பட பலர், தேர் வடம் பிடித்தனர். தேர் பொன் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இன்று பொன் வீதியில் இருந்து அக்ரஹாரம் வீதியில் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !